உதயன் எக்ஸ்பிரஸ் தீ விபத்துக்கான காரணம் பற்றி 10 நாள் ஆகியும் துப்பு துலங்கவில்லை

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் நடந்த உதயன் எக்ஸ்பிரஸ் ரெயில் தீவிபத்துக்கான காரணம் பற்றி 10 நாள் ஆகியும் துப்பு துலங்கவில்லை. மதுரை பாணியில் சம்பவம் நடந்ததா எனவும் விசாரணை நடத்தப்படுகிறது.;

Update: 2023-08-31 18:45 GMT

பெங்களூரு:-

உதயன் எக்ஸ்பிரஸ் ரெயில்

பெங்களூரு மெஜஸ்டிக்கில் உள்ள சங்கொள்ளி ராயண்ணா சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு உதயன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மும்பையில் இருந்து வந்த அந்த ரெயில் கடந்த

25-ந்தேதி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்தசமயத்தில் திடீரென்று குளுகுளு வசதி கொண்ட பி-1, பி-2 ரெயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது. அதாவது பயணிகள்வந்து இறங்கி சென்ற ஒரு மணி நேரத்திற்கு பிறகேஇந்த தீவிபத்து ஏற்பட்டிருந்தது.

இதனால் இந்த தீவிபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை டி.ஜி.பி. மனோஜ் யாதவ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிட்டி ரெயில் நிலையத்திற்கு நேரில் சென்ற போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் விசாரணை நடத்தினார். மேலும் ரெயில் பெட்டிகளை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

10 நாள் ஆகியும்துப்பு துலங்கவில்லை

இருப்பினும் சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆகியும் இந்த தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதனால் இந்த வழக்கில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

இதற்கிடையே மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் டீ போட கியாஸ் அடுப்பு பயன்படுத்திய போது தீவிபத்து ஏற்பட்டது

இதுபோல், பெங்களூருவில் நடந்த உதயன் எக்ஸ்பிரஸ் ரெயில் தீவிபத்துக்கும் கியாஸ் அடுப்பு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் எடுத்துவரப்பட்டதா அல்லது யாராவது புகைப்பிடித்துவிட்டு ரெயில் பெட்டியில் அணைக்காமல் போட்டது காரணமா என்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

தடய அறிவியல் அறிக்கை

மேலும் விபத்து நடந்த ரெயில் பெட்டிகளில் பயணம் செய்தவர்கள் யார்? தொழில்நுட்ப கோளாறு காரணமா? என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் ரெயில் நிலைய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அத்துடன் தீவிபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டிகளில் சேகரிக்கப்பட்ட பொருட்களின் தடய அறிவியல் சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆய்வறிக்கைக்காக போலீசார் காத்திருந்து வருகிறார்கள். அந்த அறிக்கை வந்த பிறகே தீவிபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்