பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது கடந்த 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-28 10:13 GMT

அகமதாபாத்,

குஜராத் மாநிலம், சபர்கந்தாவில் உள்ள சபர் பால் பண்ணையில் ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் பின் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அதில் அவர் பேசும்போது, "பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு 40 கோடி லிட்டராக இருந்தது. தற்போது 400 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் விவசாயிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது.

விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை அதிகரிப்பதற்காக கடந்த 8 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பலன்கள் தற்போது கிடைத்து வருகிறது. விவசாயம் தவிர, கால்நடைகள் வளர்ப்பு, மீன்வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்தி போன்ற பிற தொழில்களும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்துள்ளது.

மேலும், கால்நடைகள் சாப்பிடுவதால் பிளாஸ்டிக்கை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்