பா.ஜனதா தலைமை கூறியபடி தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு; ஈசுவரப்பா சொல்கிறார்
பா.ஜனதா தலைமை கூறியபடி தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஈசுவரப்பா கூறினார்.
சிவமொக்கா:
பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஈசுவரப்பா, தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்த நிலையில் ஈசுவரப்பா, சிவமொக்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா தலைமை கூறியபடி தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளேன். கர்நாடக மேலிட பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டு கொண்டதால், தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதினேன். எனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி கேட்டு கொண்டதை தவிர வேறு எதுவும் பெரிய விவாதம் நடக்கவில்லை. நான் இன்னும் கட்சிக்கு விசுவாசம் மிக்க தொண்டனாக இருக்கிறேன். கட்சி தலைமை அறிவிக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். இந்த தேர்தல் மட்டுமல்ல அனைத்து தேர்தல்களிலும் நான் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் பாகுபாடு இல்லாமல் கட்சியை முன்நிறுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.