சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: கேரள ஐகோர்ட்டு

சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 27- ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

Update: 2023-12-25 16:13 GMT

சபரிமலை,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து ஐயப்பனை தரிசனம் செய்து செல்கிறார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 27- ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1.63 லட்சம் பேர் மலை ஏறி உள்ளனர்.

இந்த நிலையில், சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கேரள ஐகோர்ட்டின் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் கேரள டிஜிபி நேரடியாக தலையிட வேண்டும் என ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்