கல்லூரி விழாவில் இரு தரப்பினர் இடையே மோதல்: இன்ஜினியரிங் மாணவன் குத்திக்கொலை

கல்லூரி விழாவில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இன்ஜினியரிங் மாணவன் உயிரிழந்தான்.

Update: 2023-04-29 12:08 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆண்டுவிழா நடைபெற்றது.

அப்போது, இரு தரப்பு மாணவர்கள் இடையே கல்லூரி வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது சக மாணவர்கள் கத்தியால் குத்தியதில் 4-ம் ஆண்டு படிக்கும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவன் பாஸ்கர் (வயது 22) ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

படுகாயமடைந்த பாஸ்கர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்