ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்கு

ஜாபர் சாதிக்கை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Update: 2024-03-10 15:53 GMT

புதுடெல்லி,

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் நேற்று கைது செய்யப்பட்டார். மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஜாபர் சாதிக் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜாபர் சாதிக்கை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தலில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை இனி விசாரிக்க தொடங்கும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்