மேற்கு வங்க மந்திரி, எம்.எல்.ஏ வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!
இன்று காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருவதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.;
கொல்கத்தா,
மேற்கு வங்கத்தில் மாநில அரசு நடத்தும் பள்ளிகளில் ஆள்சேர்ப்பு மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் கொல்கத்தா மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள வீடுகள், நிறுவன வளாகங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மந்திரி சுஜித் போஸ் மட்டுமின்றி, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான தபஸ்ராய் மற்றும் வடக்கு தும் தும் நகராட்சி முன்னாள் தலைவர் சுபோத் சக்ரவர்த்தி ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இன்று காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருவதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.