காஷ்மீரில் என்கவுண்ட்டர்: தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி சுட்டு கொலை

சம்பவ பகுதியில் இருந்து, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2023-11-09 01:55 GMT

சோபியான்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் கதோஹலான் பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்றனர்.

இதில், பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலில், தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை, வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து சம்பவ பகுதியில் இருந்து, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனை காஷ்மீர் மண்டல போலீசார் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்