காஷ்மீரில் என்கவுண்ட்டர்; பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீரில் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஒரு பயங்கரவாதியை இந்திய ராணுவம் இன்று சுட்டு கொன்றது.

Update: 2022-10-31 13:09 GMT



குப்வாரா,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கெரான் பிரிவில் ஜுமாகுண்ட் பகுதியில் எல்லை கடந்து ஊடுருவலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது.

இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்பட்ட ஒரு பயங்கரவாதியை இந்திய ராணுவம் இன்று சுட்டு கொன்றுள்ளது. இதனை காஷ்மீர் மண்டல போலீசார் டுவிட்டரில் உறுதி செய்துள்ளனர்.

தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் இந்திய ராணுவம் நடத்திய இரு வேறு என்கவுண்ட்டர்களில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இதேபோன்று, திராச் பகுதியில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். சோபியானின் மூலு பகுதியில் போலீசார் மற்றும் ராணுவம் இணைந்து நடத்திய தாக்குதலில் மற்றொரு பயங்கரவாதியை சுட்டு கொன்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்