உங்க போனுக்கு எதும் எமெர்ஜென்சி அலார்ட் வந்ததா? காரணம் இதுதான்

இன்று மதியம் 12 மணி முதல் 12.44 மணிக்குள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஆன்ட்ராய்டு செல்போன்களுக்கு ‛எமர்ஜென்சி அலர்ட் மெசேஜ்' ஒரு ‛பீப்' சத்தத்துடன் சென்றடைந்தது.;

Update: 2023-09-15 14:53 GMT

புதுடெல்லி,

பேரிடர் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைக்ளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பக தற்போது காலநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் இயற்கை பேரிடர் அச்சுறுத்தல்கள் உள்ளன. திடீர் வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய நெருக்கடியான தருணங்களில் மக்களுக்கு அலார்ட் செய்யும் வகையில் புதிய

இன்று மதியம் 12 மணி முதல் 12.44 மணிக்குள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஆன்ட்ராய்டு செல்போன்களுக்கு ‛எமர்ஜென்சி அலர்ட் மெசேஜ்' ஒரு ‛பீப்' சத்தத்துடன் சென்றடைந்தது. அந்த மெசேஜில், ‛‛இந்த மெசேஜ் என்பது மத்திய அரசின் தொலை தொடர்பு துறையின் செல் பிராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மெசேஜை நீங்கள் புறக்கணித்து விடுங்கள். இதற்கு ரீப்ளே எதுவும் செய்யவில்லை. இந்த மெசேஜ் என்பது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் இந்தியா முழுவதும் எமர்ஜென்சி அலர்ட் விடுக்கும் பரிசோதனைக்கானது. இது அவசர காலத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்கூட்டி எமர்ஜென்சி அலர்ட் செய்வதற்கான சோதனையை மேற்கொள்ள இந்த மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்