கொல்கத்தா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கொல்கத்தா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-04-26 17:12 GMT

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. கொல்கத்தா விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது மதியம் 1 மணியளவில் வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெயில் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலையடுத்து விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், போலீசார் இணைந்து விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர்.

சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்