ரெயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை - மத்திய அரசு முடிவு

ரெயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2022-09-18 19:12 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

ரெயில் தண்டவாளங்களில் சிக்கி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 45 யானைகள் இவ்வாறு உயிரிழந்திருப்பதாக ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியிருந்தது. எனவே யானைகள் உயிரிழப்பை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 1,800 கி.மீ. தண்டவாள பகுதிகளில் அபாயகரமான இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. அவற்றில் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் 15 முதல் 20 பகுதிகளில் சோதனை அடிப்படையில் சரிவுப்பாதை உள்ளிட்டவை அமைத்து யானைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதிகள் பற்றிய விவரங்களை ரெயில்வேக்கும் அளித்து இருக்கிறது.

கற்கள் மற்றும் செங்குத்தான கரைகள் இருப்பதால் யானைகளால் வேகமாக தண்டவாளங்களை கடக்க முடிவதில்லை. எனவே மண்ணால் ஆன சாய்தளங்கள் அமைக்கப்பட்டு சோதிக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்