மின்வாரிய தேர்வு முறைகேடு; மேலும் 3 பேர் சிக்கினர்
மின்வாரிய தேர்வு முறைகேட்டில் மேலும் 3 பேர் சிக்கினர்.
பெங்களூரு: கர்நாடக மின்சாரத்துறையில் காலியாக இருந்த 600 இளநிலை பொறியாளர் பதவிக்கு கடந்த மாதம் (ஆகஸ்டு) 7-ந் தேதி தேர்வு நடந்தது. பெலகாவி மாவட்டம் கோகாக்கில் ஒரு தேர்வு மையத்தில் நடந்த தேர்வில் சிலர் தேர்வின் போது முறைகேடு செய்து இருந்தனர். இதுகுறித்து கோகாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தந்தை-மகன் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்து இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் 3 பேரை கோகாக் போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களின் பெயர்கள் கிரீஷ், பீரப்பா, சிவானந்த் ஆகும். இவர்கள் 3 பேரும் மின்வாரியத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து தேர்வு எழுத சென்றவர்களுக்கு எலெக்ட்ரானிக் டிவைஸ் மூலம் வெளியில் இருந்து பதில் கூறியது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், எலெக்ட்ரானிக் டிவைசுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் கைதாகி இருப்பதன் மூலம் கைது எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது.