காஷ்மீரில் தேர்தல் எப்போது? - கவர்னர் தகவல்

காஷ்மீரில் தேர்தல் எப்போது என்பது குறித்து அம்மாநில கவர்னர் மனோஜ் சின்கா தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-04 01:01 GMT

Image Courtacy: PTI

ஸ்ரீநகர்,

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், காங்கிரஸ் மூத்த தலைவர் கரன்சிங்குக்கு பாராட்டு விழா நடந்தது. அதில் பேசிய கரன்சிங், சட்டசபை தேர்தல் நடத்தி, மாநில அந்தஸ்து அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதன்பிறகு கவர்னர் மனோஜ் சின்கா பேசியதாவது:-

காஷ்மீர் சட்டசபை தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று பிரதமரும், மத்திய உள்துறை மந்திரியும் நாடாளுமன்றத்தில் பலதடவை அறிவித்துள்ளனர். காஷ்மீரில் தொகுதி மறுவரையறை பணி முடிந்து விட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடங்கி உள்ளது. அது முடிந்தவுடன், சட்டசபை தேர்தல் உறுதியாக நடைபெறும். அதன்பிறகு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும். இதில் சந்தேகமேவேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்