ஆக.6-ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது

Update: 2022-06-29 10:54 GMT

புதுடெல்லி,

நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூலை 5 ஆம் தேதி தொடங்குகிறது.வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூலை 19 ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 20 ஆம் தேதி வேட்பு மனுவுக்கான பரிசீலனை நடைபெறும்.

தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, அதற்கு முன்பாக புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வது அவசியம்.

Tags:    

மேலும் செய்திகள்