பிரதமர் மோடி எதையும் செயல்படுத்த மாட்டார்; குமாரசாமி கடும் தாக்கு
புனிதர் போல் பேசும் பிரதமர் மோடி எதையும் செயல்படுத்த மாட்டார் என குமாரசாமி கடுமையாக தாக்கியுள்ளார்.;
பாகல்கோட்டை:
புனிதர் போல் பேசும் பிரதமர் மோடி எதையும் செயல்படுத்த மாட்டார் என குமாரசாமி கடுமையாக தாக்கியுள்ளார்.
குமாரசாமி பேட்டி
பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
இரு கட்சிகளின் தேசிய தலைவர்களும் வருகிற 8-ந்தேதி வரை கர்நாடகம் வருவார்கள். ஆனால் கர்நாடகத்தில் ஏதாவது நடந்தால் வருவார்களா?. பிரதமர் மோடியும் பிரசாரத்திற்கு வந்துள்ளார். தேர்தல் என்பதால் வருகிறார். தேர்தல் முடிந்ததும் டாடா காட்டிவிட்டு சென்றுவிடுவார்.
புனிதர் போல் பேசும் பிரதமர் மோடி
பின்னர் நாடாளுமன்ற தேர்தலுக்காக மீண்டும் பிரசாரத்திற்கு வருவார். மோடி புனிதர் போல் பேசுவார். ஆனால் எதையும் செயல்படுத்த மாட்டார். பிரதமர் மோடி பேச மட்டுமே செய்வார். மக்களுக்கான நான் பாம்பாக மாற தயார் என மோடி கூறியுள்ளார். அவர் விருப்பம்படி அவர் பாம்பாக ஆகட்டும். ஆனால் பாம்பு எப்போதுமே ஆபத்து தான்.
நான் பாம்பு, விஷ கன்னி பற்றி பேச போவதில்லை. இன்றைய அரசுக்கு இது எல்லாம் தேவை இல்லை. மாநிலத்தில் சரியான நேரத்தில் மழை பெய்யாததால் விவசாய பயிர்கள் நாசமாகி உள்ளன. அதுபற்றி விவாதிக்க வேண்டும்.
பிரதமருக்கு வளர்ச்சி
ஆனால் இது பற்றி பேசாமல் விஷ பாம்பு, விஷ கன்னி பற்றி பேசிக்ெகாண்டு இருக்கிறார்கள். இது மக்களின் வாழ்க்கையை சரி செய்யவா போகிறது. இரட்ைட என்ஜின் அரசால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம் என பிரதமர் மோடி கூறுகிறார்.
கர்நாடகத்தின் செல்வத்தை யார் கொள்ளையடித்தாலும் பா.ஜனதாவுக்கும், பிரதமர் மோடிக்கும் வளர்ச்சி தான். இது இரட்டை என்ஜின் அரசால் தான் சாத்தியம்.
இவ்வாறு அவர் கூறினார்.