தேர்தல் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு
தேர்தல் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 23-ந்தேதி காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கினார். கூட்டம் நடந்த போது தேர்தல் அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்த வந்தனர். அதற்கு ஸ்ரீனிவாஸ் கடும் ஆட்சேபனை தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளை பணியை செய்யவிடாமல் தடுத்ததாக ஸ்ரீனிவாஸ் மீது விதானசவுதா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஸ்ரீனிவாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.