கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 'செக்' வைக்க அமித்ஷா திட்டம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ‘செக்’ வைக்க அமித்ஷா திட்டம் வகுத்துள்ளார்.

Update: 2023-04-22 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் லிங்காயத் விவகாரத்தை கையில் எடுத்து காங்கிரசுக்கு 'செக்' வைக்கும்படி பா.ஜனதாவினருக்கு அமித்ஷா திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்.

பா.ஜனதாவில் லிங்காயத் அணை உடைந்தது

கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்திற்காக அரசியல் கட்சி தலைவர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இந்த தேர்தல் பிரசார களத்தில் லிங்காயத் தலைவர்கள் விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, தேர்தலில் லிங்காயத் தலைவர்களான எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதி ஆகியோர்களுக்கு பா.ஜனதா டிக்கெட் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தியில் ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதி ஆகியோர் அக்கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்துவிட்டனர்.

லிங்காயத் தலைவர்களை பா.ஜனதா அவமதித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அத்துடன் பா.ஜனதாவில் லிங்காயத் என்ற அணை உடைந்து தலைவர்கள் பிற கட்சிகளுக்கு தண்ணீர் போல் பாய்ந்தோடி வருவதாக கூறியுள்ளார்.

பா.ஜனதா பதிலடி

இதற்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, எடியூரப்பா, ரேணுகாச்சார்யா, சோமண்ணா ஆகியோர், பா.ஜனதா லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த 2 பேருக்கு (எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர்)முதல்-மந்திரி பதவி கொடுத்துள்ளது. பா.ஜனதாவில் தான் பெரும்பாலான லிங்காயத் சமுதாய தலைவர்கள் உள்ளனர் என்றும், காங்கிரஸ் கட்சியில் தான் நிஜலிங்கப்பா, வீரேந்திர பட்டீல் ஆகியோரை காங்கிரஸ் எப்படி நடத்தியது என்பது தெரியும் என பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே லிங்காயத் ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கும் ஒரே கட்சி பா.ஜனதா எனவும் பா.ஜனதாவினர் கூறி வருகிறார்கள். அத்துடன் லட்சுமண் சவதி தேர்தலில் தோல்வி அடைந்தாலும், எம்.எல்.சி. பதவி கொடுத்து அவரை துணை முதல்-மந்திரி ஆக்கியது. அதுபோல் ஜெகதீஷ் ஷெட்டருக்கும் முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இருவருமே கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு காங்கிரசுக்கு சென்று விட்டதாகவும் பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்