வார்த்தை தவறிய லட்சுமண் சவதியால் சலசலப்பு

காங்கிரஸ் என்பதற்கு பதிலாக பா.ஜனதா என்று கூறிய லட்சுமண் சவதியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-15 18:45 GMT

பெங்களூரு:

பெலகாவி மாவட்டம் அதானி தொகுதியில் பா.ஜனதா சார்பில் டிக்கெட் எதிர்பார்த்து முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி காத்திருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக ரமேஷ் ஜார்கிகோளியின் நண்பரான மகேஷ் குமட்டள்ளிக்கு பா.ஜனதா வாய்ப்பு அளித்துள்ளது. இதனால் அதிருப்தியை வெளிப்படுத்திய லட்சுமண் சவதி, தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேற்று முன்தினம் காங்கிரசில் சேர்ந்தார்.

பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த இந்த இணைப்பு விழாவில் லட்சுமண் சவதி பேசுகையில், வாய் தவறி பா.ஜனதா கட்சிக்கு வந்த என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றி என்று கூறினார். இதை கேட்டு மேடையில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் காங்கிரஸ்.... காங்கிரஸ்... என கோஷமாக கூறினர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட லட்சுமண் சவதி, காங்கிரசுக்கு வந்த என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றி என கூறினார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. நீண்ட காலம் பா.ஜனதாவில் இருந்து வந்தவர், திடீரென காங்கிரசில் இணைந்ததாலும், பழக்க தோஷத்தில் லட்சுமண் சவதி இவ்வாறு கூறியதாக சிலர் கிண்டலாக கூறியதை கேட்க முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்