'இலவச காண்டம்' கொடுத்து தேர்தல் பிரசாரம்... நாட்டையே மிரளவிட்ட ஆந்திராவின் இரு பெரும் கட்சிகள்

கட்சியின் சின்னம், லோகோ மற்றும் பெயர் அச்சிடப்பட்ட காண்டம் பாக்கெட்டுகள் வழங்குவது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

Update: 2024-02-23 07:31 GMT

அமராவதி,

ஆந்திராவில் சின்னம், லோகோ மற்றும் கட்சியின் பெயர் அச்சிடப்பட்ட காண்டம் வழங்கி அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்வது தெரிய வந்துள்ளது. ஆந்திராவில் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் ஆகியவை வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கின்றன.

இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியினர் காண்டம் பாக்கெட்டுகளை வழங்கி பிரசாரம் செய்வதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்தது.

இதையடுத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரும் தங்கள் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட காண்டம் பாக்கெட்டுகளை விநியோகிப்பதாக தெலுங்கு தேசம் கட்சி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் சின்னம், லோகோ மற்றும் கட்சியின் பெயர் அச்சிடப்பட்ட காண்டம் பாக்கெட்டுகள் வழங்குவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த சம்பவம் நாட்டையே மிரளவைத்துள்ளது. அதிகாரத்திற்காக அரசியல் கட்சிகள் எதையும் செய்ய துணிந்து விட்டதாக இணையவாசிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்