இரியூர் சட்டசபை தொகுதி ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை

இரியூர் சட்டசபை தொகுதி ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது.

Update: 2023-04-22 18:45 GMT

பெங்களூரு:

சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் சட்டசபை தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளராக இருப்பவர் ரவீந்திரப்பா. சட்டசபை தேர்தலையொட்டி அவர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணி அளவில் இரியூர் தாலுகா தர்மாபுரா அருகே முங்குசுவள்ளி கிராமத்தில் உள்ள ரவீந்திரப்பாவின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை மேற்கொண்டனர். தாவணகெரே, பெங்களூரு, மைசூருவில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ரவீந்திரப்பாவின் பண்ணை வீட்டில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். மாட்டு கொட்டகை, ஆட்டு பண்ணையிலும் சோதனை மேற்கொண்டனர். மேலும் ரவீந்திரப்பாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது வீட்டில் வேலை செய்பவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சிக்கியதாக தகவல்கள் ெவளியாகி உள்ளது.

சிறிய நீர்ப்பாசன துறையில் தலைமை என்ஜினீயராக இருந்த ரவீந்திரப்பா, பணி ஓய்வுக்கு பிறகு அரசியலில் நுழைந்தார். ஜனதாதளம்(எஸ்) கட்சியில் சேர்ந்த அவருக்கு, அக்கட்சி இரியூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது. ரவீந்திரப்பா வேட்புமனு தாக்கல் செய்தபோது, தனக்கு ரூ.7½ கோடி சொத்து இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்