இமாசல பிரதேசத்தின் வயது முதிர்ந்த வாக்காளர் காலமானார்
பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி. நட்டா, உறவினரான கங்கா தேவிக்கு இறுதி சடங்கை நடத்தினார்.;
சிம்லா,
இமாசல பிரதேசத்தின் வயது முதிர்ந்த வாக்காளராக அறியப்படுபவர் கங்கா தேவி (வயது 104). பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி. நட்டாவின் உறவினரான அவர் குல்லு நகரில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியிலுள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார்.
வயது முதிர்வால் இன்று காலை அவர் காலமானார். இதனை தொடர்ந்து குல்லுவுக்கு, நட்டா மற்றும் அவருடைய குடும்பத்தினர் சென்றனர். இதன்பின்பு கங்கா தேவியின் உடல் பிலாஸ்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
நட்டாவின் தந்தை என்.எல். நட்டா, அவருடைய மூத்த சகோதரியான கங்கா தேவிக்கு மலரஞ்சலி செலுத்தினார். ஜே.பி. நட்டா மற்றும் அவருடைய மகன் இறுதி சடங்கை நடத்தினர்.
இமாசல பிரதேசத்தில் 2022-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, கங்கா தேவியை மிக வயது முதிர்ந்த வாக்காளர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.