தெருநாய்கள் கடித்து குதறியதில் முதியவர் சாவு

கலபுரகி அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் முதியவர் உயிரிழந்தார்.

Update: 2022-10-16 18:45 GMT

பெங்களூரு:

முதியவர் சாவு

கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா தேவலகானகாபுரா கிராமத்தில் ஒரு முதியவர் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த முதியவர் மீது ஒரு சரக்கு ஆட்டோ மோதியது. இதில், முதியவரின் காலில் பலத்தகாயம் ஏற்பட்டு இருந்தது. அந்த முதியவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்காமல், கிராமத்தில் உள்ள சாலையில் படுக்க வைத்துவிட்டு சரக்கு ஆட்டோ டிரைவர் சென்றிருந்தார். இதனால் 2 நாட்களாக சாலையோரம் உள்ள கடை முன்பாகவே முதியவர் படுத்து தூங்கினார். நேற்று முன்தினம் இரவும் சாலையோரம் அவர் படுத்திருந்தார். இந்த நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த தெரு நாய்கள், முதியவரை கடித்து குதறியது. இதில், சம்பவ இடத்திலேயே அந்த முதியவர் உயிர் இழந்திருந்தார்.

போலீஸ் விசாரணை

மேலும் முதியவரின் உடல் பாகங்ளை தெரு நாய்கள் தின்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் தெரு நாய்களை விரட்டி அடித்தார்கள். தகவல் அறிந்ததும் அப்சல்புரா போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அந்த முதியவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதையடுத்து, கிராம மக்களுடன் சேர்ந்து, அந்த முதியவரின் உடலை போலீசார் இறுதி சடங்கு செ்ய்தார்கள். இந்த சம்பவம் அப்சல்புராவில் நேற்று சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்