அரசமரம்', 'வாள்', 'சூரியன்' 3 சின்னங்களை விருப்பமாக கோரி ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முறையீடு

அரசமரம்', 'வாள்', 'சூரியன்' ஆகிய 3 சின்னங்களை விருப்பமாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஏக்நாத் ஷிண்டே அணி தெரிவித்துள்ளது.

Update: 2022-10-11 11:14 GMT

மும்பை,

உத்தவ் தாக்கரே அணிக்கு பெயர், சின்னம் ஒதுக்கிய அதேநேரத்தில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு 'பாலாசாகேப்பின் சிவசேனா' (பாலாசாகேபஞ்சி சிவசேனா) என்ற பெயரை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. எனினும் அந்த அணிக்கான சின்னம் ஒதுக்கப்படவில்லை.

சின்னம் தொடர்பாக விருப்ப சின்னங்களின் புதிய பட்டியலை தாக்கல் செய்ய அந்த அணிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. ஏக்நாத் ஷிண்டே அணி கேட்ட 3 சின்னங்களும் தேர்தல் ஆணையம் வசம் உள்ள சின்னங்கள் பட்டியலில் இல்லாததால், புதிய பட்டியலை தாக்கல் செய்ய ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து அரசமரம்', 'வாள்', 'சூரியன்' ஆகிய 3 சின்னங்களை விருப்பமாக கோரி தேர்தல் ஆணையத்தில் ஏக்நாத் ஷிண்டே அணி முறையீட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்