சட்டவிரோத பண பரிமாற்ற புகார் கிரிப்டோ கரன்சி நிறுவனத்தின் ரூ.64 கோடி முடக்கம்

சீன கடன் செயலிகளின் மோசடிகள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு கிரிப்டோ சொத்துகள் வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2022-08-05 17:50 GMT

புதுடெல்லி, ஆக.6-

பிட்காயின், கிரிப்டோ கரன்சி ஆகியவற்றை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் வசிர்எக்ஸ். இந்த நிறுவனம் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. மேலும், சீன கடன் செயலிகளின் மோசடிகள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு கிரிப்டோ சொத்துகள் வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. வசிர்எக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சமீர் மாத்ரே தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஆனால், சமீர் மாத்ரே ஒத்துழைக்கவில்லை என்று தெரிவித்தது. இதையடுத்து, வசிர்எக்ஸ் நிறுவனத்தின் வங்கி டெபாசிட் ரூ.64 கோடியே 67 லட்சத்தை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது.

Tags:    

மேலும் செய்திகள்