அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும்: செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து

சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-07-27 10:38 GMT

புதுடெல்லி,

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது; நீதிமன்ற காவல் சட்டப்படியானது; ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல. சிகிச்சையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது எனவும், அவரை காவலில். எடுத்து விசாரிக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகலில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார். இந்த வழக்கு விசாரணையின் போது, அமலாக்கத்துறைக்கு  கைது செய்யும் அதிகாரம் உள்ளது என்றும் அதிகமான தரவுகள் பெறவே விசாரணை முகமைகள் கைது செய்வதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்