கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாவட்டத்தில் உள்ள மாலுகனஹஸ்ஸ கிராமத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவானது என்று பேரிடர் மேலாண்மை தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.