இந்தியா-வங்காளதேசத்தில் கடும் நிலநடுக்கம்.. மக்கள் பீதி

நிலநடுக்கம் ஏற்பட்டபோது மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

Update: 2023-12-02 07:30 GMT

வங்காளதேசத்தின் தெற்கு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகாக பதிவாகியிருந்ததாக ஜெர்மன் ஆய்வு மையம் தெரிவித்தது. 55 கிமீ ஆழத்தில், 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளிக்கு வந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்