உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
உத்தரகாண்டில் இன்று பிற்பகல் 3.55 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.;
டேராடூன்,
உத்தரகாண்டில் உள்ள பிதோராகர் பகுதியில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 3.55 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பிதோராகரில் 5 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.