மத்தியப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
மத்தியப் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜெய்பூர்,
மத்தியப் பிரதேசத்தின் சிங்ரவுலி பகுதியில் இன்று பிற்பகல் 2.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இல்லை.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நேற்று 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 4 ரிக்டர் வரையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஆகும். இவற்றால் மிக அரிதாகவே சேதங்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.