மேகாலயாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு
மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.;
ஷில்லாங்,
மேகாலயாவில் இன்று பிற்பகல் 2.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவு கோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் மேகாலயாவின் நோங்போவின் மேற்கு-தென்மேற்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தின் எதிரொலியால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.