உத்தர்காசியில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இன்று அதிகாலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.;
உத்தர்காசி,
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இன்று அதிகாலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தர்காசியில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 24 கிலோமீட்டர் தொலைவில் அதிகாலை 1.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிமீ ஆழத்தில் இருந்தது.