அந்தமானில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

அந்தமானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது.;

Update: 2023-08-03 04:59 GMT

போர்ட் பிளேர்,

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்