மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டர் 4.8 ஆக பதிவு
மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.;
இம்பால்,
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் உள்ள மாய்ரங் நகரத்தின் தென் கிழக்கு பகுதியில் நேற்று இரவு 11.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து பல கிலோ மீட்டர்கள் தொலைவு வரை உள்ள இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.