இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு

இமாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.6 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update: 2023-02-21 06:02 GMT

தர்மசாலா,

இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலா பகுதியில் இருந்து சுமார் 56 கி.மீ. வடக்கு பகுதியில் நேற்று இரவு 10.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் உருவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது பொருள் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்