மின்னணு கழிவு பொருட்களை விஞ்ஞான முறையில் ஒழிக்க வேண்டும்; கலெக்டர் செல்வமணி பேச்சு

மின்னணு கழிவு பொருட்களை விஞ்ஞான முறையில் ஒழிக்க வேண்டும் என கலெக்டர் செல்வமணி பேசியுள்ளார்.

Update: 2022-10-16 19:00 GMT

சிவமொக்கா;


உலக மின்னணு கழிவு ெபாருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று சிவமொக்கா நகரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் செல்வமணி கலந்து கொண்டு பேசியதாவது:-

சிவமொக்கா நகரில் நாள்தோறும் சேரும் பழுதடைந்த மின்னணு கழிவு பொருட்கள் (எலெக்ட்ரானிக் கழிவு பொருட்கள்) அழிக்க விஞ்ஞான ரீதியில் திட்டங்கள் தீட்ட வேண்டும். அதனால் நகரில் சுற்றுச்சூழலும் மாசு இல்லாமல் இயற்கையுடன் மனிதன் வாழ முடியும். மனிதன் ஏதாவது ஒரு மின்னணு பொருள் இல்லாமல் வாழ முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் பழுதான பொருட்களை அழிப்பது மிக கடினமான செயல்.

இதை விஞ்ஞான ரீதியில் மட்டுமே அளிக்க முடியும். அறிவியல் விஞ்ஞானிகள் இதற்கான தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். மனிதன் நாள்தோறும் தான் உபயோகிக்கும் மின்னணு பொருட்கள் பழுது அடைந்தால், அதை அழிக்க முடியாமல் மலைபோல் குவித்து ஆங்காங்கே வைத்துள்ளனர். இதனை விஞ்ஞான முறையில் ஓழிக்க அடுத்தாண்டிற்குள் திட்டம் தீட்டவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சிவமொக்கா மாநகராட்சி மேயர் சுனிதா அண்ணப்பா, தொழில் கூட்டமைப்பு மற்றும் வர்த்தகம் கூட்டமைப்பின் தலைவர் கோபிநாத், சுற்றுச்சூழல் அதிகாரிகள், மின்னணு பொருட்கள் விற்பனையாளர்கள், பழுதுபார்க்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்