பெங்களூருவில் விரைவில் இ-பைக் டாக்சி சேவை

அரசு அனுமதி அளித்த நிலையில் பெங்களூருவில் விரைவில் இ-பைக் டாக்சி சேவையை தொடங்க சில தனியார் நிறுவனங்கள் முன் வந்துள்ளனர.

Update: 2022-12-20 18:45 GMT

பெங்களூரு:-

பெங்களூருவில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் வாடகை ஆட்டோ சேவை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் நெருக்கடியான சாலைகளில் சுலபமாக செல்வதற்கு வசதியாக இ-பைக் டாக்சி சேவையை அறிமுகம் செய்ய சில தனியார் நிறுவனங்கள் முன்வந்தன.

அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கடந்த சில மாதங்களாக அரசு போக்குவரத்து துறை ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில் இ-பைக் டாக்சி நிறுவனங்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை பெங்களூருவில் வாடகை முறையில் அறிமுகம் செய்ய அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக 100 மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும், இதற்கு குறைந்தபட்சமாக 5 கிலோ மீட்டருக்கு ரூ.25 மற்றும் 10 கிலோ மீட்டருக்கு ரூ.50 என்ற கணக்கில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் விரைவில் பெங்களூரு சாலைகளில் இந்த இ-பைக் டாக்சி சேவை செயல்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்