தசரா தொடக்க விழா மேடையில் அமர மேயருக்கு அவகாசம் வழங்காததற்கு கண்டனம்

தசரா தொடக்க விழா மேடையில் அமர மேயருக்கு அவகாசம் வழங்காததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-27 18:45 GMT

மைசூரு:

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா, நேற்றுமுன்தினம் தொடங்கியது. தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி, ஷோபா கரந்தலாஜே, மந்திரி எஸ்.டி.சோமசேகர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் தசரா விழா மேடையில் மாநகராட்சி மேயர் சிவக்குமார் அமர அவகாசம் வழங்காததற்கு முன்னாள் மேயர் பி.எல்.பைரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

தசரா விழா மேடையில் மைசூரு மாநகராட்சி மேயருக்கு அமர அவகாசம் செய்து கொடுத்திருக்க வேண்டும். மைசூருவை பொறுத்தவரை முதல் பிரஜை மேயர் தான்.

தசரா தொடக்க விழா மேடைக்கு மேயரை அழைக்காமல் கீழே அமர வைத்திருப்பது மைசூரு மக்களுக்கு அவமானம் செய்தது போல் உள்ளது. அதேநேரத்தில் சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ. ஜி.டி.தேவேகவுடாவையும் அழைக்காதது கண்டத்திற்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்