வேலைக்கான சம்பளத்தை வழங்காததால் நரேகா திட்ட தொழிலாளிகள் போராட்டம்

வேலைக்கான சம்பளத்தை வழங்காததால் நரேகா திட்டத்தின் கீழ் தொழிலாளிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

Update: 2022-10-20 18:45 GMT

கொள்ளேகால்:

கர்நாடகத்தில் நரேகா திட்டத்தின் கீழ் தொழிலாளிகளுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதில் பணியாற்றும் தொழிலாளிகளுக்கு சரியான ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்டம் கிசூர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தின் கீழ் நரேகா திட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளிகள் பலருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த சம்பளத்தை உடனே வழங்கவேண்டும் என்று பல முறை தொழிலாளிகள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று நரேகா திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் தொழிலாளிகள் கிசூர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் நரேகா திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள தொகையை வழங்கவேண்டும். இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சிவக்குமார், தொழிலாளர்களுக்கான ஊதியத்தை இன்னும் 15 நாட்களுக்குள் வழங்குவதாக உறுதி அளித்தார். இதை தொடர்ந்து கூலி தொழிலாளிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்