வட மாநிலங்களில் கனமழை காரணமாக ரெயில் சேவை கடும் பாதிப்பு - 406 பயணிகள் ரெயில்கள் ரத்து

கனமழை காரணமாக சரக்கு ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பயணிகள் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Update: 2023-07-13 12:54 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக கனமழை பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வட மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக கடந்த ஜுலை 7-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை சுமார் 300 சரக்கு ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 406 பயணிகள் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 600 சரக்கு, எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் 500 பயணிகள் ரெயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்