ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தி நோயாளிக்கு மதுபானம் கொடுத்து, குடித்த ஓட்டுனர்

ஒடிசாவில் ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தி நோயாளிக்கு மதுபானம் கொடுத்து, ஓட்டுனரும் குடித்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

Update: 2022-12-20 15:36 GMT



கட்டாக்,


ஒடிசாவில் ஜகத்சிங்பூர் பகுதியில் தீர்த்தல் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு ஆம்புலன்ஸ் ஒன்று விரைவாக சென்று கொண்டிருந்தது.

அதில், நகுலே தெகுரி என்ற நோயாளி இருந்துள்ளார். அவர் மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்து உள்ளார். சிகிச்சைக்காக அவரை கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், கட்டாக்கில் இருந்து பாரடைஸ் செல்லும் வழியில் ஓட்டுனர் சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்தி உள்ளார். இதன்பின், பாட்டிலை திறந்து கிளாஸ்சில் மதுபானம் ஊற்றி, நோயாளிக்கு கொடுத்துள்ளார்.

இதன்பின், அவரும் மதுபானம் குடித்துள்ளார். இந்த சம்பவத்தின்போது, பெண் மற்றும் ஒரு சிறுவனும் உடன் இருந்துள்ளனர். இந்த காட்சிகள் வீடியோவாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கூறும்போது, நோயாளி நகுலே, மதுபானம் வேண்டும் என விரும்பி கேட்டார். அதனாலேயே மதுபானம் கொடுத்தேன் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்