வகுப்பறையில் மதுபாட்டில்: மதுபோதையில் பாடம் எடுத்த பெண் ஆசிரியர் - அதிகாரிகள் அதிர்ச்சி...!

கர்நாடகாவில் பள்ளியில் மதுபோதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய பெண் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-09-09 09:31 GMT

பெங்களூரு.

கர்நாடக மாநிலம் துமாபூர் பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் கங்கா லெட்சுமால் என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவர் மதுவுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகின்றது. மேலும், இவர் பள்ளிக்கு மது பாட்டிலை கொண்டு வந்து மது அருந்தியபடி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார்.

இதனை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனை கண்டுகொள்ளாமல் ஆசிரியை கங்கா லெட்சுமால் தொடர்ந்து மது அருந்தி விட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார்.

இதனால், இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளிக்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆசிரியை கங்கா லெட்சுமாலிடம் விசாரணை நடத்தினர். பின்னர், கங்கா லெட்மால் அறைக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது மேசை பெட்டியில் மது பாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை தொடரந்து மது பாட்டிலை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆசிரியை கங்கா லெட்சுமாலை பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View




Tags:    

மேலும் செய்திகள்