அசாமில் ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது

அசாமின் கர்பி ஆங்லாங்கில் ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-30 10:01 GMT

கர்பி ஆங்லாங்,

அசாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் நேற்று ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரை கைது செய்தனர்.

போதைப்பொருள் கடத்தல் குறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொகஜன் உட்பிரிவின் கீழ் திலை தினியாலியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. அப்போது மணிப்பூரில் இருந்து வந்த வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தின் பின்பக்கத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கிலோ மார்பின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பொகஜன் துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி ஜான் தாஸ் கூறும்போது, ஹெம்கோலால் லுன்கின் (வயது 37) மற்றும் ஜங்மின்லால் ஹாக்கிப் (வயது 38) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட இருவரும் மணிப்பூரை சேர்ந்தவர்கள் என்றும் கூறினார். மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ.15 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்