மினி லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!
அசாமில் மினி லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் கம்ருப் மாவட்டத்தில் 'தொலைத்தொடர்பு பணி' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மினி லாரியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போர்கா என்ற இடத்தில் அந்த மினி லாரியை தடுத்து நிறுத்தினர்.
உடனே டிரைவரும், வாகனத்தில் இருந்த மற்றவர்களும் தப்பி ஓடிவிட்டனர். மினி லாரியை சோதனையிட்டபோது, இசை சாதனங்களிலும், மாற்று டயரிலும் 5 கிலோ அபின், 2 ஆயிரம் போதை மாத்திரைகள் உள்பட 6 கிலோ போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. அவற்றின் சந்தை மதிப்பு ரூ.10 கோடி என்று கருதப்படுகிறது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரையும், மற்றவர்களையும் தேடி வருகிறார்கள்.