பஞ்சாபில் போதைப்பொருள் விற்பனை; 3 பேர் கைது - பாகிஸ்தான் கடத்தல்காரர்களுடன் தொடர்பு என தகவல்

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 12 கிலோ ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-08-10 22:09 GMT

Image Courtesy : @DGPPunjabPolice twitter

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் அந்தப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 3 பேர் ஹெராயின் போதைப்பொருளை விற்றுக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 12 கிலோ ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட 3 பேரும் பாகிஸ்தானை தளமாகக்கொண்ட கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்