கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.
கலபுரகி: கலபுரகி மாவட்டம் ஆலந்தா டவுனை சேர்ந்தவர்கள் ஸ்ரீசைல் ஹிரபுரா (வயது 13), லட்சுமண் மடிவாளா (12). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் 2 பேரும் நீச்சல் அடித்து பழக அங்குள்ள கிணற்றில் குளிக்க சென்றனர். கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த போது 2 பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஆலந்தா போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி ஆலந்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.