ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று ஜார்க்கண்ட் பயணம்; ஜே.எம்.எம் கட்சியின் ஆதரவு யாருக்கு?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு இன்று ஜார்க்கண்ட்டுக்கு சென்று ஆதரவு திரட்ட உள்ளார்.;

Update: 2022-07-04 03:57 GMT

ராஞ்சி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நிறைவடைவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வருகிற 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார். இருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு இன்று ஜார்க்கண்ட்டுக்கு சென்று ஆதரவு திரட்ட உள்ளார்.

அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறது என்பது குறித்து இதுவரை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 27 அன்று, டெல்லியில் உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரை சோரன் சந்தித்தார்.இருப்பினும், அந்த கூட்டங்களுக்குப் பிறகும், சோரன் அமைதியாக இருந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கல் யஷ்வந்த் சின்ஹா மற்றும் திரவுபதி முர்மு இருவரும் ஜேஎம்எம் கட்சியின் செயல் தலைவர் மற்றும் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனிடம் தங்களுக்கு ஆதரவு கோரியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) ஜேஎம்எம் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தால் சமூகத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு பாஜகவால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக நிறுத்தியிருப்பதால், காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் ஜேஎம்எம் யாரை ஆதரிக்கும் என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

ஜேஎம்எம் கட்சியின் ஆதரவு யாருக்கு? பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று ஆதரவு திரட்ட ஜார்க்கண்ட் பயணம்

Tags:    

மேலும் செய்திகள்