இந்தியாவின் தீய தத்துவத்திற்கு திரவுபதி முர்மு முன்னிறுத்தப்படுகிறார் - காங். மூத்த தலைவர்
இந்தியாவின் தீய தத்துவத்திற்கு திரவுபதி முர்மு முன்னிறுத்தப்படுகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
இந்திய ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அதேவேளை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அஜோய் குமார் இன்று அளித்த பேட்டியில், யஷ்வந்த் சின்கா சிறந்த வேட்பாளர். திரவுபதி முர்முவும் சிறந்த நபர் தான். ஆனால், இந்தியாவின் தீய தத்துவத்திற்கு திரவுபதி முர்மு முன்னிறுத்தப்படுகிறார். நாம் திரவுபதி முர்முவை பழங்குடியினர்களின் அடையாளமாக பார்க்கக்கூடாது. ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக உள்ளார். ஆனால், பட்டியலின சமுகத்தினர் மீது தாக்குதல்கள் நடைபெறுகிறது. மோடி அரசு மக்களை முட்டாளாக்குகிறது' என்றார்.