மணிப்பால் அருகே ஆபத்தான முறையில் காரை ஓட்டிய வாலிபர் கைது
மணிப்பால் அருகே ஆபத்தான முறையில் காரை ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு;
உடுப்பி மாவட்டம் மணிப்பால் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிவள்ளி கிராமம் அருகே ஆச்சார்யா சாலையில் நேற்றுமுன்தினம் கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த காரின் மேல் பகுதியில் பட்டாசுகள் இருந்தன. இதனை அந்த பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இதனை பார்த்த உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீத்திரா உத்தரவின் பேரில் மணிப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி சென்ற நபரை தேடிவந்தனர். இந்த நிலையில் போலீசாா் காரில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடித்து சென்றதாக மணிப்பால் டவுன் வி.பி.நகர் பகுதியை சேர்ந்த விஷால் கோஹில் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.