பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த டி.ஆர்.டி.ஓ.

பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

Update: 2024-08-13 13:16 GMT

ஜெய்ப்பூர்,

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மனிதர்களால் தூக்கிச் செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை(MPATGM), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (டி.ஆர்.டி.ஓ.) இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள பொக்ரான் துப்பாக்கி சூடு தளத்தில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த ஏவுகணையின் செயல்திறன் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருப்பதாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை பகல் மட்டுமின்றி, இரவிலும் துல்லியமாக செயல்படக்கூடியது என அவர்கள் கூறியுள்ளனர். பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்